மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

இனியா படத்தில் இணைந்த ஸ்டார் ஜோடி!

இனியா படத்தில் இணைந்த ஸ்டார் ஜோடி!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வரும் ராகுல் தேவ் தனது மனைவி முக்தா கோஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்.

நரசிம்மா, மழை, ஆதவன் உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ள ராகுல் தேவ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துவருகிறார். இவரது மனைவியான பாலிவுட் நடிகை முக்தா கோஸ் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், ராகுல் தேவ்வும் முக்தா கோஸும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. தற்போது தமிழில் அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் காபி திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் இனியா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமூகத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் உருவாகிறது.

வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, மோகன் ராஜா பாடல்கள் எழுதியுள்ளார். வெங்கட்நாத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெங்கட் ராஜன் மேற்கொண்டுள்ளார். ஓம் சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon