மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 11 ஆக 2020

சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்!

சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் சுவாரஸ்யமான தகவலொன்று வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி வெளியாகயிருக்கும் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குநர் ராஜேஷ் எப்போதும் தன்னுடைய படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளில், அதற்கு முன் தான் இயக்கிய படங்களின் கதாநாயகர்களை கெளரவ தோற்றத்தில் நடிக்க வைப்பது வழக்கம். ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா, உதய நிதி நடித்த ஒகே ஒகேவில் ஆர்யா, ஆர்யா நடித்த விஎஸ்ஓபியில் விஷால், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜீவா என தன்னுடைய ட்ரேட் மார்க்காகவே இதனை பின்பற்றி வருகிறார்.

வரப்போகும் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் கார்த்தி, ஜீவா, ஆர்யா, உதய நிதி ஸ்டாலின் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் கெளரவ தோற்றத்தில் வரவிருக்கிறார்கள். இத்தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் ராதிகா, பிரபு, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு தினேஷ் கிரிஷ்ணன். படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon