மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

திருத்தம்

திருத்தம்

இன்று (ஏப்ரல் 16) காலைப் பதிப்பில் வெளியான ‘தேர்தல் களத்தில் சாதியின் அறுவடை’ என்னும் கட்டுரையில் வாக்காளரின் குரலாக ஒலித்த கருத்துக்களில் சில குழப்பங்கள் இருப்பதை வாசகர்கள் சிலர் சுட்டிக் காட்டினார்கள்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி, ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிகள், அவற்றின் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் குழப்பப்பட்டிருக்கின்றன. கிருத்திகா முனியசாமி, மலேசியா பாண்டியன் ஆகியோர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்கள். மலேசியா பாண்டியன் வென்றார். ராமநாதபுரம் தொகுதியின் தற்போதைய எம்.பி. அன்வர் ராஜா.

“இந்த வாட்டி நவாஸ்கனி நிக்கிறாரு. போன வாட்டி மலேசியா பாண்டியன் நின்னாரு” என்று வாக்காளர் சொல்வதிலும் குழப்பம் உள்ளது. நவாஸ் கனி நிற்பது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி. போன முறை மலேசியா பாண்டியன் நின்றது முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி.

“பெரும்பாலும் எங்க தொகுதியில திமுக நேரடியா நிக்காது” என்று அந்த வாக்காளர் சொல்வதிலும் பிழை உள்ளது. 2004 ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் திமுகவின் பவானி ராஜேந்திரன் வென்றார். 2009 தேர்தலில் திமுகவின் ரித்தீஷ் வென்றார். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் முருகவேல் 2006இல் வென்றார்.

வாக்காளரின் கருத்துதான் என்றாலும் தகவல்களைச் சரிபார்க்காமல் வெளியிட்டமைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பிழையைச் சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றி!

- ஆசிரியர்

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon