மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஏப் 2019

வேலூர்: தேர்தலை ரத்து செய்ய இதுவரையில் உத்தரவு இல்லை!

வேலூர்: தேர்தலை ரத்து செய்ய இதுவரையில் உத்தரவு இல்லை!

வேலூரில் தேர்தலை ரத்து செய்ய இதுவரையில் எந்த உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஷேபல்லி சரண் கூறியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கதிர் ஆனந்தைக் குறிவைத்து மார்ச் 30ஆம் தேதி துரைமுருகன் வீடு, அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கிங்க்ஸ்டன் கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் ரூ.10.50 லட்சத்தையும், அதற்கு மறுநாள் நடத்தப்பட்ட சோதனையில் துரைமுருகன் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் 11.48 கோடி ரூபாயையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

இந்த விவகாரத்தையடுத்து கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூரில் தேர்தலை ரத்து செய்யவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் நேற்று இரவு செய்திகள் பரவியது. தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என என்டிடிவி ஊடகத்தில் செய்தி வெளியானது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 16 ஏப் 2019