மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

பாஜக, காங்கிரஸை அனுமதிக்காதீர்: தினகரன்

பாஜக, காங்கிரஸை அனுமதிக்காதீர்: தினகரன்

வரும் தேர்தலில் தேசியக் கட்சிகளைத் தமிழகத்தில் அனுமதிக்காதீர் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்னும் சில மணி நேரங்களில் முடியவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் தொடர்பாக தலைவர்கள் பேட்டியளிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் வடசென்னை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன், பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் வெற்றிவேலுக்கு வாக்கு சேகரித்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (ஏப்ரல் 16) தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், “துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காக வெற்றிவேலுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் கட்சி தீர்வளிக்கப் போவதில்லை. தமிழகத்தை வஞ்சிக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை வரும் தேர்தலில் தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. மாநிலக் கட்சியான அமமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம்தான் உங்கள் பகுதி தேவைகளை நிறைவேற்றிட முடியும். இதனை எண்ணிப் பார்த்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேருடன், இஸ்லாமியர்கள் 41 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் வெற்றிபெற்றவுடன் மேற்கொள்வோம் என்று தெரிவித்த தினகரன், “தமிழகத்தின் நலன்களை மறந்துவிட்டு சுயநலத்திற்காக மோடியுடன் கூட்டணி வைத்துள்ள பழனிசாமி கம்பெனியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon