மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

நெல்லை: மனோஜ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு!

நெல்லை: மனோஜ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு!

போக்குவரத்துக்கு இடையூறாகப் பிரச்சாரம் மேற்கொண்டதாக, அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் கடுமை அதிகமாக உள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகள் காலை மற்றும் மாலை வேளையில் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டனர். போக்குவரத்து நெரிசல் அதிகமான சாலைகளில் பிரச்சாரம் செய்ததால், சில பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுறவுள்ளதால், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக, இன்று (ஏப்ரல் 16) காலையில் தச்சநல்லூர், திருநெல்வேலி, ராதாபுரம், காவல் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். இதேபோல, வள்ளியூர் வட்டாரத்தில் மனோஜ் பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்தார். அப்போது, அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாகப் பிரச்சாரம் செய்ததாகக் கண்காணிப்புக் குழு அலுவலர் மனோகரன், வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மனோஜ் பாண்டியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்று தமிழகத்தின் பல இடங்களில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரத்தினால் போக்குவரத்து முடங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon