மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

பாமகவை விமர்சிக்கிறாரா பார்த்திபன்?

பாமகவை விமர்சிக்கிறாரா பார்த்திபன்?

நடிகர் பார்த்திபன் எப்போதும் இரட்டை பொருள்படும்படி சுவாரஸ்யமாக பேசவும் எழுதவும் கூடியவர். இன்று (ஏப்ரல் 16) அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்று பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. கொள்கைகள், வேட்பாளர்களின் தகுதி, திறன் ஆகியவற்றையும் கடந்து தேர்தலில் வாக்குகளைப் பெற பணமும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதாக பார்த்திபன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு, தேர்தல்=தேத்துதல்(பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு” என்று அவரது பதிவு அமைந்துள்ளது.

இந்தப் பதிவில் மாம்பழம் என்று குறிப்பிடுவது பாட்டாளி மக்கள் கட்சியைக் குறிக்கும் வகையில் உள்ளதாக அவரது ரசிகர்கள் பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon