மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

வேப்பிலை அடிக்கணும் சார்: அப்டேட் குமாரு

வேப்பிலை அடிக்கணும் சார்: அப்டேட் குமாரு

எப்பாடா ஒரு வழியா பிரச்சாரம் எல்லாம் முடிஞ்சது. ஊருக்குள்ள பல பேரு இந்த ஒரு மாசத்துல ஒரு மாதிரி ஆயிட்டாங்க. எங்கய்யாவது கூப்ட்டு போய் வேப்பிலை அடிச்சாத் தான் சரியா வரும் போல. தம்பி ஒருத்தன் அவங்க கட்சி தலைவர் போற எல்லா கூட்டத்துக்கும் போயிருக்கான். எல்லா இடத்துலயும் ஒரே பழமொழியை வித்தியாசம் வித்தியாசமா மாத்தி மாத்தி சொல்லிருக்காரு. அதை எல்லாம் கேட்டுட்டு இப்ப அவன் பேரு என்னடான்னு கேட்டா , “கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க..கொல்லன் தெருவுல ஊசிப்போன பனியாரத்தை வித்த மாதிரி.. அதுனால என்னைய பத்தி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்குறேன்”ன்னு சொல்றான். அவங்க அம்மா அப்பாலாம் முழிச்சுகிட்டு இருக்காங்க. இன்னொரு தம்பி தூங்கும் போதுகூட சிரிச்சுகிட்டே இருக்கான். அதாவது பரவாயில்லை இன்னொருத்தன் வீட்டுக்கு காலையில போயிருந்தேன். வீட்டுல இருந்த பொருளை எல்லாம் காயிலான் கடைக் காரரு வந்து அள்ளிகிட்டு போறாரு. எதைப் பார்த்தாலும் அடிச்சு நொறுக்கிருக்கான். எப்பா இவங்களுக்கு எப்படி வைத்தியம் பார்க்குறது.. அப்டேட்டை பாருங்க.

@Kozhiyaar

ஐஸ்கிரீமின் சுவை கப்பில் நிறைந்து இருக்கும் ஐஸ்கிரீமில் இல்லை, அதை மூடி இருக்கும் அட்டையில் ஒட்டி இருக்கும் சிறிது ஐஸ்கிரீமில் இருக்கிறது!!

@RahimGazzali

எங்க அம்மாவை இந்த முதியோர் இல்லத்திலிருந்து ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் சார்.

ஏன் திடீர்ன்னு உங்க அம்மா மேல கரிசனம்?

அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்வரை கொடுக்கறாங்க. எங்கம்மாவுக்கும் ஓட்டு இருக்குல்ல...

நொடிக்கதை

@mohanramko

கடையில் டீ குடிப்பது போல் ஸ்டாலின் நடிக்கிறார்.- ஓ.பன்னீர்செல்வம் #

நம்மைப் போலவே தான்....

@RahimGazzali

"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?"

"சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை. அதில் ஈனமில்லை. எப்போதும் வால் பிடிப்பார்"

அதிமுக பிரச்சார ஆட்டோவில் கேட்டு சிரித்தது.

@Annaiinpillai

பேஃரன் லவ்லி போட்டா வெள்ளை ஆயிடுவோம்னு நினைச்சதெல்லாம் 90ஸ் கிட்ஸ்கள் ஏமாந்த லிஸ்ட்டுல உள்ள டிசைன்!

@Annaiinpillai

நீட் தேர்வை நீக்கிவிட்டால் மட்டும் தமிழகம் வளர்ச்சி அடைந்துவிடுமா? - கமலஹாசன்# தாங்கள் மீசையை முறுக்கி விட்டால் மட்டும் அரசியல்வாதி ஆகி விட முடியுமா ?!

@pandiprakash

வாய்கால் வரப்புகளில் சுற்றித் திரிந்த பால்யம் தான் இப்போது வளர்ந்து வாட்சப் வைபரில் வாயாடிக் கொண்டிருக்கிறது..

@ItsJokker

"அவர் செய்ததெல்லாம் சரி" என்று அப்பாவை மகன் உணரும் போதும்,

"அவளின் முனங்களிலும் கூட, காதல் இருந்தது" என்று மனைவியை கணவர் உணரும் பொழுதிலும்

சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதில்லை.

@kathir_twits

நீட் விலக்கு குறித்து பிஜேபியிடம் வலியுறுத்துவோம் - அதிமுக தேர்தல் அறிக்கை

யாராவது நீட் பத்தி பேசுனா வீட்ல ரெயிடு விடுவோம் - பிஜேபி !!

@Jino_Offl

கோழியின் ரிசல்ட் எப்பவும் முட்டைதான்!

@manipmp

கம்மங்கூல்,மோர் என்பது

"கூழ் ட்ரிங்க்ஸ்"

@Fazil_Amf

விவசாயிகள் ஒத்துழைப்போடு 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் -மாஃபா பாண்டியராஜன்

• யாரு அய்யாக்கண்ணு ஒத்துழைப்போடு .?!

@shivaas_twitz

இங்க ஒரு திமுக பிரச்சாரக் கூட்டம்...

பழனிசாமியை திட்டுறதா நினைச்சி ஜெயலலிதாவின் தைரியத்தையும், ஆளுமையையும் பாராட்டுறாங்க...

அவ்ளோ தான் சார் அரசியல்..!

@mohanramko

எவ்வளவு தண்ணீர் தெளித்தாலும் போதை குறைவதில்லை, மல்லிகை மலர்களிடம்....

@saikailash11

ஒரு படம் ரீலிஸ் பண்ணாதுக்கு நாட்டை விட்டே போறனு சொன்ன நம்மவரே

நாளைக்கு நாட்டு பிரச்சனையை பார்த்து வெளிநாடு ஓடிபோயிட்டா நாங்க என்ன பண்ணுவோம்

@shivaas_twitz

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்,

இணையத்துக்கும் களத்துக்கும் உள்ள தூரத்தை..!

@manipmp

ஒரு வெற்றி பத்து பேருக்கு அட்வைஸ் செய்ய வைக்கும் தகுதியை கொடுத்து விடுகிறது

@RahimGazzali

தலைமையின் கூட்டணி முடிவுக்கெதிரா சலம்பும் தொண்டர்களை கட்டம் கட்டுறாங்க. ஆனால் தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக கூட்டணி முடிவு எடுக்கும் தலைமையை என்ன செய்வது?

அதிமுக- பாஜக கூட்டணி முடிவு பிடிக்காத அதிமுக தொண்டர் ஒருவர் இப்ப டீக்கடையில் பேசிட்டு இருந்தபோது ஒட்டுக்கேட்டது.

-லாக் ஆஃப்

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon