மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

தேர்தல் விதிமுறை மீறல்: டாஸ்மாக் கடைக்கு சீல்!

தேர்தல் விதிமுறை மீறல்: டாஸ்மாக் கடைக்கு சீல்!

சென்னை மயிலாப்பூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி நள்ளிரவு வரை திறந்திருந்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது

வரும் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி ஏப்ரல் 16 முதல் 18ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 4ஆம் தேதியன்று இது தொடர்பாக தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தரவொன்றைப் பிறப்பித்தார். ஏப்ரல் 16, 17, 18 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ஆம் தேதியன்று அனைத்து மதுபான டிப்போக்கள், கடைகள், பார்கள் மூடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 15) இரவு தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மூன்று நாட்களுக்கு மது விற்பனை இல்லை என்பதால், மது பாட்டில்களை வாங்கி வைப்பதற்காகச் சிலர் வரிசையில் நின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையொன்றில், தடையை மீறி நள்ளிரவு வரை விற்பனை நடைபெற்றது. இது பற்றி தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கடைக்கு பூட்டி சீல் வைத்தனர் அதிகாரிகள்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon