மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

தர்பார்: ரஜினிக்கு வில்லன் ரெடி!

தர்பார்: ரஜினிக்கு வில்லன் ரெடி!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தர்பார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் அனைத்திலும் வில்லன் கதாபாத்திரம் வலிமையாக படைக்கப்பட்டிருக்கும். 90களில் ரகுவரன் ரஜினிக்கு நிகராக படங்களில் ஆதிக்கம் செலுத்தினார். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதன்பின்னர் தமிழ்த் திரையுலகில் இருந்து ரஜினிக்கான வில்லன் கதாபாத்திரத்திற்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. கன்னடம், தெலுங்கிலிருந்து சிலர் வந்தாலும் சமீபகாலமாக ரஜினிக்கான வில்லன் பாலிவுட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறார். டேனி, நானா படேகர், அக்‌ஷய் குமார், நவாஸுதீன் சித்திக் ஆகியோரைத் தொடர்ந்து தர்பார் படத்திலும் பாலிவுட்டில் இருந்தே வில்லன் நடிகரை இறக்கியுள்ளது படக்குழு.

பாலிவுட்டில் இஷாக், பாஹி 2ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்துள்ளார். பாஹி 2 படத்தின் மூலமே இந்த வாய்ப்பு தனக்கு அமைந்ததாக பிரதீக் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

புதன், 17 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon