மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: அவல் சாலட்

கிச்சன் கீர்த்தனா: அவல் சாலட்

உடனடி எனர்ஜி தரும் சாலட்

ஏதோ ஒரு நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெயர் தெரியாத பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, அன்று சமையல் செய்ய சோம்பலாக இருந்திருக்கலாம். நெருப்பில் சமைக்காமலேயே வாய்க்கு ருசியாக உணவு தயாரிப்பது எப்படி என யோசித்திருக்கலாம். காய்கறித் துண்டுகளை வெட்டிப் போட்டு, உப்பு, வேறு சில விஷயங்கள் சேர்த்துக் குலுக்கிக் கலந்து உண்டு, `ஆஹா அருமை!’ என்று துள்ளி மகிழ்ந்திருக்கலாம். இப்படி சோம்பேறித்தனத்தின் பலனாக ரோமானியர்கள் கண்டறிந்ததே `சாலட்’ என்பது அனுமானம். அனுமானம் எப்படியிருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்னும் யதார்த்தத்துக்கு வருவோம்.

என்ன தேவை?

ஊறவைத்த அவல் - 50 கிராம்

முளைகட்டிய பயறு - 2 டீஸ்பூன்

தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட் கலவை - ஒரு கப்

பனீர் துண்டுகள் - 50 கிராம்

கரம் மசாலாத் தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த் தூள்) - தலா கால் டீஸ்பூன்

கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை

வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு

மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

என்ன பலன்?

எளிதில் செரிமானமாகும். உடனடி எனர்ஜி தரும். உடல் சூட்டைத் தணிக்கும். செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். உடல் எடையைக் குறைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

நேற்றைய ரெசிப்பி: கூல் டீ!

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon