மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

ரஜினியை சந்தித்த லாரன்ஸ்

ரஜினியை சந்தித்த லாரன்ஸ்

எவ்வளவு பிரச்சினைகளும், சர்ச்சைகளும் இருந்தாலும் ஒரு சிலவற்றை நடிகர் ராகவா லாரன்ஸ் கைவிடுவதே இல்லை. அவற்றில் ஒன்று, ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியின்போதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெறுவது. அந்த வகையில் தான் ரஜினியை மும்பையில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

தர்பார் படத்தின் ஷூட்டிங்குக்காக மும்பையில் இருக்கும் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸை சந்தித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்தப்படத்தின் ஷூட்டிங்குக்காக மும்பைக்கு சென்றிருந்தபோது தான் ரஜினியை சந்தித்திருக்கிறார் லாரன்ஸ். காஞ்சனா 3 திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து பெற மும்பைக்குச் சென்றிருந்த லாரன்ஸுக்கு, ஆந்திராவிலிருந்து ஒரு தலைவலி வந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர். அவர் வேறு யாருமல்ல, ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார்கள் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி தான்.

ராகவா லாரன்ஸ் மீது பாலியல் குற்றம் சுமத்திய ஸ்ரீ ரெட்டி, ஆந்திராவில் வைக்கப்பட்டுள்ள காஞ்சனா 3 படத்தின் பேனரை ஃபோட்டோ எடுத்து, ட்விட்டரில் பதிவு செய்து “மாஸ்டரின் காஞ்சனா 3 வெற்றிக்கு எனது வாழ்த்துகள். உங்கள் படத்தில் நடிக்க நான் காத்திருக்கிறேன். உங்களில் எத்தனைப்பேர் என்னை மாஸ்டரின் படத்தில் பார்க்க காத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon