மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 26 பிப் 2021

செல்வராகவனின் திறமை : சூர்யா

செல்வராகவனின் திறமை : சூர்யா

மின்னம்பலம்

சூர்யா நடித்துள்ள நந்த கோபால குமரன்(NGK) படம் வெளிவருவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு அப்படத்தின் இயக்குனர் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது. என்ஜிகே படத்தின் பாடல், டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யா பேசியது அதனை பொய்யாக்கும் விதமாக இருந்தது. அத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன் என அவர் பேசியது திரையுலக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா பேசுகிற போது “செல்வராகவன் இயக்கத்தில் நடித்தது, ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு போகும் போதும் புதுப் படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இன்று இருக்காது. 2002 ஆம் ஆண்டு காதல்கொண்டேன் பாடல்கள் கேட்க என்னை அழைத்திருந்தார். இரவு தாமதமாகச் சென்றேன். நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தப்பாடல்களைக் கேட்டு முடித்த நேரத்தில் மின்சாரம் போய்விட்டது, இருட்டிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அப்போது உங்களுடன் சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்று செல்வராகவனிடம் சொன்னேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அது நடந்திருக்கிறது.

செல்வராகவன் தனது இயக்கத்திலும் சரி படத்தின் டப்பிங்கிலும் சரி நுணுக்கமாக பார்த்துப் பார்த்து வேலை செய்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி கணவன் மனைவி போல இருக்கும்.

சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்து கொடுத்தார்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போது என்னை வைத்து எடுங்கள் என்றார்.

சூர்யா முதன் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், மன்சூர் அலி கான், குரு சோமசுந்தரம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon