மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

குழந்தைகள் விற்பனை வழக்கு: சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்!

குழந்தைகள் விற்பனை வழக்கு: சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்!

ராசிபுர குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (மே 1) விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பல ஆண்டுகளாகக் குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பான ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் ஓய்வு பெற்ற செவிலியர், அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் என மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் பலர் கைதாகி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பதிலளித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், “குழந்தை விற்பனை விவகாரத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு இருப்பது தெரியவரும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களை பணியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. நாமக்கல்லில் சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டு வருகின்றன. விதிமுறைகளைப் பின்பற்றாத 5 இல்லங்கள் ஏற்கனவே மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தைகள் தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் தத்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் இவ்வழக்கு காவல்துறையிடம் இருந்து கடந்த 29ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்நிலையில் சிபிசிஐடி தரப்பில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளாகச் சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon