மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

தமிழக அரசியல் களத்துக்கு மே தினப் பரிசு!

தமிழக அரசியல் களத்துக்கு மே தினப் பரிசு!

உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி, தோழர் நல்லகண்ணு பற்றிய ஆவணப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. கம்யூனிச கொள்கையில் உறுதியுடன் தனது இளமைப் பருவம் முதல் 94 வயது வரையில் தளராது வீறுநடை போட்டு வரும் தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கையை மட்டும் பிரதிபலிக்காமல், அவரது பங்களிப்பினால் வாழ்வு மேம்பட்ட பலரது கருத்துகளையும் வெளிப்படுத்தும் டீசர் அரசியல் களத்தில் அறிமுகமாகும் பலருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

NGK திரைப்படத்தில் அரசியல் பேசி நடித்திருக்கும் நடிகர் சூர்யா இந்த டீசரை வெளியிட்டிருக்கிறார். ‘அதனால் தான் அவர் நல்லகண்ணு’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டீசரை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா ‘அதனால் தான் அவர் நல்லகண்ணு’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கம்யூனிசக் கொள்கைகளை நாட்டின் எல்லா திசைகளுக்கும் கொண்டு செல்ல நல்லகண்ணு எப்படியெல்லாம் போராடினார்; போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை கூர்மையான வசனங்களால் எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் பொன்.சண்முகவேலு. இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியின் தொண்டன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறது. நல்லகண்ணுவின் வாழ்க்கையைக் கற்றுத் தேர்ந்து அரசியலில் இறங்கும் எந்தவொரு அரசியல்வாதியாலும் ஊழலிலும், குடிமக்களுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு ஆதரவாகவும் செல்ல முடியாது. அதனால் தான் அவர் நல்லகண்ணு.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon