மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

தல தெரிஞ்சா சொல்லி அனுப்புங்க: அப்டேட் குமாரு

தல தெரிஞ்சா சொல்லி அனுப்புங்க: அப்டேட் குமாரு

உலகத்துல இருக்க எல்லாருக்கும் மே மாசம் லீவ் விட்டாலும், பத்திரிகைகாரன் மட்டும் அன்னைக்கும் வேலைக்கு வருவான்னு பெருமையா சொல்லிட்டு வந்தேன். இங்க வந்தா, எந்தப்பக்கம் திரும்புனாலும் அஜித் பொறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிட்டிருக்காங்க. இதை நான் வீட்ல இருந்தே ரிப்போர்ட் பண்ணிருப்பனே. இதுகூட பரவால்ல, நம்ம துணை முதல்வரும் வாழ்த்தை சொல்லி வெச்சிருக்கார். சரி, நம்மாளுக அப்டேட்லயாச்சும் ஏதாவது புதுசா ட்ரை பண்ணிருப்பாங்கன்னு பாத்தா, அதே காதல் கோட்டை, முகவரி இப்டியே லிஸ்ட் போகுது. அதுவும் எல்லாம் ரீட்வீட்டு. சொந்தமா யோசிச்சு ஸ்டேட்டஸ் போட்டாத்தான் லைக் விழுகும்னு காப்பிரைட் கிளைம் பண்ணாய்ங்கன்னா, மொத்த சோசியல் மீடியாவும் அவுட் ஆகிடும் போல. நீங்க அப்டேட்டைப் பாருங்க.

உள்ளூராட்டக்காரன்

ஏதாவது நான்கு அணிகளை தகுதி நீக்கம் செய்ய வழி உள்ளதா என்பது குறித்து எடப்பாடியாருடன் RCB டீம் அவசர ஆலோசனை...

Kannama

கண்டது (காண்பது) எல்லாம் கவிதை ஆகுதே!!

AJITH FACTS

அதாவது செட்டியார் அஜித்துக்கு பல தொழில் தெரியும்... பைக் ஓட்ட தெரியும், கார் ஓட்ட தெரியும் ,ட்ரோன் ஓட்ட தெரியும், பிரியாணி செய்ய தெரியும் , மெக்கானிக் வேலை தெரியும்,அரசியல் ஆசை இல்லாதவர் .. ரேர் பீஸ் செட்டியார்

A.P.Perumal

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது - தமிழிசை

இவங்க இப்படி பேசறத யாராவது தடுத்தால் நல்லாயிருக்கும்.

VASUGI BHASKAR

கூலிங் கிளாஸ் கண்ணாடி சொன்னீங்க

டீசர்ட் சொன்னீங்க

ஜீன்ஸ் பேண்ட் சொன்னீங்க

அப்படியே அழகான அவனுடைய

சின்ன சிரிப்பை சேர்த்திருக்கலாம்

அடுத்த முறையாவது சரியா சேர்த்து சொல்லுங்க

- திவ்யா மாரி செல்வராஜ்

மெத்த வீட்டான்

நான் சூப்பர்ஸ்டார் ஆவேன் என அன்று பேட்டி கொடுத்தபோது ஊரே சிரித்தது

நீங்க சூப்பர்ஸ்டார் இல்ல அதுக்கும் மேலேன்னு இன்று உலகமே கொண்டாடுது !

amudu

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். -மோடி.

இதை ஒரு நாட்டின் பிரதமரா சொல்ல வெட்கப்படனும் சென்றாயன்.

Newton

குறுகிய சந்தில் ஆட்டோ ஓட்டுவது மாதிரி ஆகி விட்டது, சந்தில் கீச்சுவதும். சினிமா பற்றி எழுதினால் நாலு ரசிக எருமைகள் வந்து இடிக்குது. அரசியல் பற்றி எழுதினால் சில ஆட்டோ டிரைவர்கள் வந்து இடிக்கிறார்கள். ட்விட்டருக்கு சந்து என்று பெயர் வைத்தவன் கால்களைத் தேடுகிறேன்

ட்விட்டர் தாதா

ஒரு பொண்ணு #நான்என்னஜாதி னு சொல்லுங்க பாப்போம் னு Twit போட்டுருந்துச்சி...

நான் அந்த Post ல போயி நீதான் #என்_பொஞ்சாதி னு Comment பண்ணிட்டு ஓடி வந்துட்டன்

Vinayaga Murugan

ஒவ்வொருமுறையும் தேர்தல் வந்தா இவங்க எல்லாம் வரிசைல நின்னு ஓட்டுபோட்டாங்கன்னு சிலரின் படங்களை பார்க்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம். மற்ற நாட்களில் இந்தாளுங்க ரேஷன் கடையில, கோவில் வாசல்ல, சினிமா தியேட்டர்ல, தெருவுல மெட்ரோ வாட்டர் பிடிக்கறதுல எங்கேயும் வரிசைல நின்னு பார்த்தது இல்லையே.

ரா புவன்

தேவராட்டம் படத்துக்கு உபிங்க கதறுறானுக, பெரியாரிஸ்ட் கதறுறானுக, பாய்மாருங்க கதறுறானுகன்னு 10,15 ஸ்டேட்டஸ் பார்த்துட்டேன்.

ஒரே ஒரு ஸ்டேட்டஸ் கூட எவனோ கதறுனதை மட்டும் பார்க்கவே முடியல.

மூதேவி, நாய் கத்துறது இருக்கட்டும், நாயவிட அதிகமா நீ கத்தாத

-லாக் ஆஃப்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon