மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

சசிகுமார் நடிப்பில் கொம்புவெச்ச சிங்கமடா!

சசிகுமார் நடிப்பில் கொம்புவெச்ச சிங்கமடா!

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துவரும் திரைப்படம் கொம்புவெச்ச சிங்கமடா. உழைப்பாளர் தினமான இன்று இதன் ‘செகண்ட் லுக்’ போஸ்டர் வெளியாகியுள்ளது.

சசிகுமார், விஜய் சேதுபதி, லஷ்மி மேனன் நடிப்பில் சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமான எஸ்.ஆர். பிரபாகரன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

நான்காவதாக இவர் இயக்கும் இப்படத்தின் ‘செகண்ட் லுக்’ போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போஸ்டரை பதிவிட்ட இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் “அன்பு நண்பர்களுக்கு, என் நான்காவது படைப்பின் செகண்ட் லுக் போஸ்டர் உங்களின் பார்வைக்கு. அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் நடித்த கடைசி படமிது.

வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை ரேதன் மற்றும் பங்கஜம் ட்ரீம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது, சுசீந்திரன் இயக்கத்தில் மகளிர் கபடிப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் கென்னடி கிளப் என்ற படத்தில் சசிக்குமார், பாரதிராஜா இணைந்து நடித்துள்ளனர். தற்போது இதன் இறுதிக்கட்டபணிகள் நடைபெற்று வருகின்றன.

காயத்ரி, சமுத்திரக்கனி, சூரி, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸின் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon