மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 நவ 2019

அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓ.பி.எஸ்

அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓ.பி.எஸ்

பிரபலங்களும் ரசிகர்களும் இன்று பிறந்தநாள் காணும் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

மே 1ஆம் தேதியான இன்று உழைப்பாளர் தினமா இல்லை அஜித்குமாரின் பிறந்தநாள் தினமா என குழம்பும் அளவிற்கு அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘ஹேப்பி பர்த்டே தல’ என ஹாஷ்டேக்கிட்டு ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக்கி வருகின்றனர்.

இன்று நடிகர் அஜித்குமார் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்,

“எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி, திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!” என பதிவிட்டுள்ளார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon