மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று (மே 1) முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை இந்தியன் ஆயில் கார்பரேசன் உயர்த்தியுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் மானிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னை மற்றும் டெல்லியில் 28 பைசாவும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் 29 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இன்றுமுதல் மானிய சிலிண்டரின் விலை சென்னையில் 484.02 ரூபாயாகவும், டெல்லியில் 496.14 ரூபாயாகவும், மும்பையில் 493.86 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 499.29 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி சென்னையில் மானிய சிலிண்டரின் விலை 483.74 ரூபாயாக இருந்தது.

தற்போது மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல மானியம் அல்லாத சிலிண்டரின் விலை இன்று முதல் சென்னை, டெல்லி கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மானியம் அல்லாத சிலிண்டரின் விலை சென்னையில் 728 ரூபாயாகவும், டெல்லியில் 712.50 ரூபாயாகவும், மும்பையில் 684.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 738.50 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon