மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

மசூத் அசார் விவகாரம் தீர்க்கப்படும்: சீனா!

மசூத் அசார் விவகாரம் தீர்க்கப்படும்: சீனா!

அண்மையில் சீன பிரதமர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐநா பாதுகாப்பு குழுவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரம் முறையாக தீர்க்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. எனினும், பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான கால வரம்பு எதுவும் சீனா அறிவிக்கவில்லை.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் கெங்க் சுவாங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இவ்விவகாரம் முறையாக தீர்க்கப்படும் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்” என்று தெரிவித்தார். ஐநா பாதுகாப்பு குழுவில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்தன. இதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் தெரிவித்தாலும் சீனா முட்டுக்கட்டை போட்டது.

ஐநாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஏன் தடை போடப்படுகிறது என்பதற்கு சீனா விளக்கமளிக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இப்பிரச்சினையை தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனாவும் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், சீனாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon