மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 மே 2019

சுப்ரமணிய சிவா - சமுத்திரக்கனி கூட்டணியில் வெள்ளை யானை!

சுப்ரமணிய சிவா - சமுத்திரக்கனி கூட்டணியில் வெள்ளை யானை!

இயக்குநர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் நீண்ட நாட்கள் தயாரிப்பிலிருந்த வெள்ளை யானை படத்தின் அப்டேட் தற்போது மீரா கதிரவனின் ஃபேஸ்புக் பதிவின் மூலம் வெளியாகியிருக்கிறது.

2003ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுப்ரமணிய சிவா, அதன்பின் பொறி, யோகி, சீடன் என்ற படங்களை இயக்கினார். ஆனால், அப்படங்களின் தோல்வியால் சிறிது காலம் வெளிச்சத்துக்கு வராமலேயிருந்தது இவர் பெயர். வடசென்னை படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

2017ஆம் ஆண்டு சமுத்திரக்கனியை நாயகனாக வைத்து இவர் தொடங்கிய வெள்ளை யானை படத்தைப் பற்றிய அடுத்தகட்ட தகவல்கள் வெளிவராத நிலையில், நேற்று இயக்குநர் மீரா கதிரவன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளை யானை படத்தைப் பார்த்த அனுபவத்திலிருந்து ஒரு பதிவை இட்டிருந்தார்:

இயக்குநர் சுப்ரமணிய சிவா அவர்கள் இயக்கி போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கும் 'வெள்ளை யானை' திரைப்படத்தின் முதல் வடிவத்தைப் பார்த்தேன். தமிழின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக வந்திருக்கிறது. விவசாயத்தை வாழ்வாகக்கொண்டிருக்கும் மக்களின் ஆன்மாவாக இப்படத்தைப் பார்க்கிறேன். அமீர்கான் தயாரித்த அனுஷ்கா ரிஸ்வியின் Peepli ( live ) போல எல்லோராலும் கொண்டாடப்போகும் படமாக இருக்கும்.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயக் கிராமங்கள் என்கிற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால் வெள்ளை யானையை இந்தியாவின் தலைசிறந்த படங்களில் ஒன்றாக உணர்வீர்கள். சமுத்திரக்கனி இது வரையிலும் இல்லாத மெருகேறிய நடிப்பால் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். அவரை நாயகனாக்கி அடர்த்தியான ஒரு திரைக்கதையை எழுதலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்கியதில் முழு வெற்றியடைந்திருக்கிறார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 2 மே 2019