மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: பால் கஞ்சி

கிச்சன் கீர்த்தனா: பால் கஞ்சி

பித்தம் தணியச் சிறந்த உணவு

இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் உட்கார்ந்து பணிபுரிவது அதிகரித்து வருகிறது. கோடைக்காலத்தில் வெப்பத்துக்கு பயந்து ஏசி அறைகளில் வாசம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். அதுவும் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாடு அதிகம் இருப்பதால் பார்வைக் குறைபாடும், அதனால் மனச்சோர்வும் ஏற்பட்டு உடலில் பித்தம் அதிகரிக்கிறது. உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதே கஞ்சி வகைகள். சுலபமாகச் செய்யக்கூடிய இந்த பால் கஞ்சி குடித்தால் பித்தம் தணிந்து உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

என்ன தேவை?

நொய் அரிசி – ஒரு கப்

தண்ணீர் – 4 கப்

பால் – ஒரு லிட்டர்

சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசியைத் தண்ணீர்விட்டு களைந்து, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும். அரிசி வெந்ததும் பால் சேர்க்கவும். ஒரு வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி சீரகம் சேர்க்கவும். இதை அரிசி பால் கஞ்சியில் சேர்த்துப் பரிமாறவும்.

என்ன பலன்?

இதைக் குடிப்பதால் உடலின் உள்சூடு குறைந்து, பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். தாம்பத்தியக் குறைபாடுகள் நீங்கும்.

நேற்றைய ரெசிப்பி: கம்பங்கூழ்

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon