மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

பாமக பிரமுகர் கொலை: என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

பாமக பிரமுகர் கொலை: என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேர் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 11 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, ராமலிங்கம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் ஏஎஸ்பி சவுகத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு தமிழகம் வந்தது. நேற்று (மே 1) முதல் இக்குழு விசாரணை நடத்தி வருகிறது. ராமலிங்கத்தின் மகன், கைதான 11 பேர், திருவிடை மருதூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் விசாரணை நடத்திய தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று (மே 2) காலை 8 மணியளவில் திருச்சி பாலக்கரையில் உ ள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தத் தொடங்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர காரைக்காலில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம், மாவட்டச் செயலாளர் குத்தூஸ் வீடு, கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் உ ள்ள அலுவலகம், மேலகாவேரியிலுள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon