மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

பதிவுச் சான்று: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

பதிவுச் சான்று: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

தனியார் நிதி நிறுவனங்கள் பதிவுச் சான்று பெற நிபந்தனைகள் விதித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ம் ஆண்டு மார்ச் மாதம் தனியார் நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் பதிவுச் சான்று பெறுவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி 2016ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாயும், 2017ஆம் ஆண்டு 2 கோடி ரூபாயும் நிகர வைப்பு நிதியாக வைத்திருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இந்த விதிகளைப் பூர்த்தி செய்யாத 1,500 தனியார் நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றுகளை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மீண்டும் பதிவுச் சான்று வழங்க உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கான கால அவகாசத்தை 2019 மார்ச் மாதம் வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ரிசர்வ் வங்கி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (மே 2)

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிதி நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக, ரிசர்வ் வங்கி மேல்முறையீட்டு ஆணையத்தை அணுகியிருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் வாதிட்டார்.

அதை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ததுடன் 30 நாட்களில் ரிசர்வ் வங்கி மேல்முறையீட்டு ஆணையத்தை தனியார் நிதி நிறுவனங்கள் அணுக வேண்டுமென்று உத்தரவிட்டனர். அப்படி அணுகும்பட்சத்தில் சட்டத்திற்கு உட்பட்டு அவற்றைப் பரிசீலிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon