மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

அரவிந்த்சாமி ‘டிடெக்டிவ்’வாக நடிக்கும் புதியபடம்!

அரவிந்த்சாமி ‘டிடெக்டிவ்’வாக நடிக்கும் புதியபடம்!

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் பெயரிடப்படாத டிடெக்டிவ் திரில்லர் படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

டிடெக்டிவ் திரில்லர் சம்பந்தப்பட்ட இந்தக்கதையில் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். பள்ளு ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பொறுப்பை பிரசன்னா ஜிகே ஏற்றுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும் பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது.

அரவிந்த்சாமி செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து கள்ளபார்ட், வணங்காமுடி, சதுரங்க வேட்டை 2, நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ரிலீசுக்காக காத்திருக்கும் அப்படங்களைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எட்சட்றா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறார்கள். தற்போது வி.மதியழகன், அருண் விஜய், ரித்விகா நடிக்கும் பாக்ஸர் என்ற விளையாட்டை மையப்படுத்திய படத்தையும் தயாரித்து வருகிறார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon