மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

அமெரிக்காவின் தடையை சந்திக்கத் தயார்: இந்தியா!

அமெரிக்காவின் தடையை சந்திக்கத் தயார்: இந்தியா!

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்தும்படி அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா அறிவுறுத்தியது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பின் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை அனைத்து நாடுகளும் முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது.

பின்னர், இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணெய் விநியோகத்தை தொடர ஆறு மாதங்கள் கால அவகாசம் அளித்தது அமெரிக்கா. ஏப்ரல் 30ஆம் தேதியுடன் அமெரிக்காவின் காலக்கெடு முடிந்துவிட்டது. ஆகையால், தற்போது மே மாதத்தில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளையும், அதனால் ஏற்படும் தாக்கத்தையும் சந்திக்க இந்தியா தயாராகி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ரவிஷ் குமார் இன்று (மே 2) செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் தடையால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதற்காக மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளிடமிருந்து கூடுதல் சரக்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon