மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி லட்டு

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி லட்டு

சுற்றுலா ஸ்பெஷல்

நாம் பயணம் செய்வது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றிவிடுங்கள். பயணங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நமக்குப் பெரிதும் உதவுகின்றன என்கின்றன ஆய்வுகள். உணவை ருசிக்காக மட்டுமல்லாமல், உடல்நலத்துக்காகவும் சாப்பிட உதவும் இந்த ரெசிப்பி.

என்ன தேவை?

பாதாம் - ஒரு கப்

முந்திரி - ஒரு கப்

பேரீச்சம்பழம் - கால் கப்

உலர்ந்த திராட்சை - கால் கப்

பால் பவுடர் - ஒரு கப்

பொடித்த வெல்லம் - சிறிதளவு

நெய் - தேவைக்கேற்ப

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

உலர் அத்திப்பழம் – ஒன்று

எப்படிச் செய்வது?

பாதாம், முந்திரியைச் சிறிய துண்டுகளாக்கவும். பேரீச்சையை விதை நீக்கி சிறிய துண்டுகளாகச் செய்து கொள்ளவும். உலர் அத்திப்பழத்தையும் சிறிதாக வெட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பாதாம், முந்திரி, பேரீச்சம்பழத் துண்டுகள், அத்திப்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் உலர்ந்த திராட்சை, பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லத்தைப் பொடியாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் நெய்யைச் சூடாக்கி செய்து வைத்த கலவையில் சிறிது சிறிதாக விட்டு, உருண்டைகளாக உருட்டிப் பயன்படுத்தவும்.

என்ன பலன்?

புதிதாக ஒரு நகரத்தையோ அல்லது இயற்கை சார்ந்த இடத்தையோ அறிய விரும்புபவர் எனில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 அடிகள் நீங்கள் நடப்பீர்கள். அது அநேகமாக சுமார் 6.5 கி.மீ. இருக்கலாம். அது ஒரு நல்ல உடற்பயிற்சி. இதற்குத் தேவையான சக்தியை வழங்கும் இந்த எனர்ஜி லட்டு.

நேற்றைய ரெசிப்பி: ஆப்பிள் ஜாம்

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon