மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

தமிழகம்: தடுமாறும் பொறியியல் மாணவர்கள்!

தமிழகம்: தடுமாறும் பொறியியல் மாணவர்கள்!

தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களில் வெறும் 25 சதவிகிதத்தினர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கொண்ட ஆய்வின் புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 481 பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் சுமார் 81,178 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 20,562 பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 25.33 சதவிகிதம் மட்டுமே. சென்ற ஆண்டில் 40 சதவிகிதத்தினர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பொறியியல் கணிதம் 1 பாடத்தில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கணித பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “12ஆம் வகுப்பை முடித்து வரும் மாணவர்கள் அடிப்படைக் கணிதத்தில் மிகவும் வலிமையானவர்களாக இருப்பதில்லை. பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிஃபரென்ஷியல் கால்குலஸ் முக்கியப் பாடமாக இருக்கிறது. இதைப் பெரும்பாலான மாணவர்கள் சிறப்பாகப் படிப்பதில்லை. இப்பாடம் 11ஆம் வகுப்பில்தான் உள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்த இணைப்பு வகுப்புகள் நடத்தினாலும் போதிய பலன் கிடைப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கணிதம் தவிர்த்து, இயற்பியல் பாடத்தில் 55.46 சதவிகித பொறியியல் மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 68.55 சதவிகித மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். 12ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் 90 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட பொறியியல் கணிதப் பாடத்தில் தடுமாறுவதாகப் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

.

.

மேலும் படிக்க

.

.

வளர்மதியிடம் சீறிய எடப்பாடி

.

.

தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

.

சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!

.

.

செவ்வாய், 21 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon