மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

இறுதிகட்டத்தில் மாதவன் இயக்கும் படம்!

இறுதிகட்டத்தில் மாதவன் இயக்கும் படம்!

மாதவன் கதாநாயகனாக நடித்து முதன்முறையாக இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ராகெட்ரி: நம்பி விளைவு படம் தயாராகி வருகிறது. நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை படக்குழு நிறைவு செய்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பாரீஸ், பெல்கிரேடு செல்லவுள்ளது. மாதவன் தற்போது இளவயது நம்பி நாராயணனின் தோற்றத்தில் நடித்துள்ளார். சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

விக்ரம் வேதா படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு சதிஷ் சூர்யா. ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் சாப்ரான் கணேஷா நிறுவனங்கள் இந்த பயோபிக்கை இணைந்து தயாரிக்கின்றன.

.

.

மேலும் படிக்க

.

.

வளர்மதியிடம் சீறிய எடப்பாடி

.

.

எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!

.

தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

.

.

செவ்வாய், 21 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon