மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 மே 2019

மீண்டும் மோடி? என்ன நினைக்கிறது பாகிஸ்தான்?

மீண்டும் மோடி? என்ன நினைக்கிறது பாகிஸ்தான்?

இன்று (மே 23) தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் மோடி பிரதமர் என்றால் பாகிஸ்தான் என்ன நினைக்கிறது என்று அந்நாட்டு ஊடகங்களுக்கு மக்களும், அரசியல் பிரமுகர்களும் அளித்த பேட்டியைக் காணலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று சொல்லப்படும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி இம்முறை மாநிலக் கட்சிகளும் தேர்தலில் கவனம் பெற்றுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக வெளியானது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பல்வேறு கணிப்புகள் கூறியுள்ளன. இந்த நிலையில், மோடி மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராவதை விரும்பவில்லை என்று பாகிஸ்தானியர்கள் சிலர் அந்நாட்டு ஊடகங்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு மாறுபட்ட கருத்துகளையும் சிலர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் நடந்த புல்வாமா குண்டுவெடிப்பு, அதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே எழுந்த பதற்ற நிலை, இந்திய விமானப் படையின் பாலக்கோடு பதிலடித் தாக்குதல் என இருநாடுகளுக்கும் இடையில் அதீத பதற்றம் உண்டானது இந்தியத் தேர்தல் குறித்து பாகிஸ்தானியர்களிடம் கவனத்தை உண்டாக்கியுள்ளது.

லாகூரைச் சேர்ந்த ஷாகி அலாம் என்பவர் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிடம் பேசுகையில், “மீண்டும் மோடி இந்தியாவில் ஆட்சிக்கு வரக் கூடாது. அவர் பாகிஸ்தானின் மீது சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தியுள்ளார்” என்றார். அசியாஸ் என்பவர் பேசுகையில், “மோடி மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் வெல்ல மாட்டார். மக்கள் அவருக்கு எதிராக முடிவெடுத்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்கிறேன். அதுதான் பாகிஸ்தானுக்கும் நல்லது” என்றார்.

அந்நாட்டின் அரசியல் ஆய்வாளரான நஸ்ரத் ஜாவெத் ஏஏபி நியூஸ் ஊடகத்தின் டாக் ஷோ நிகழ்ச்சியில் பேசுகையில், “கடந்த முறையை விட இம்முறை குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்று மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். ஆனால், பாகிஸ்தானுடனான விவகாரங்களில் மாற்றம் ஏற்படும் என்று நான் கருதவில்லை” என்று கூறியுள்ளார். அதே தொலைக்காட்சியில் மற்றோர் அரசியல் ஆய்வாளரான பிஜே மிர் பேசுகையில், “இந்திய அரசியல் வரலாற்று எதிர்காலத்தின் முக்கியத் தேர்தலாக இத்தேர்தல் இருக்கும். இந்தியாவுடன் அண்டை நாடுகளுடனான உறவிலும் இத்தேர்தல் மாற்றத்தை உண்டாக்கலாம்” என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் அமைதிக்கான உறவில் இத்தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதால் பலரும் இந்தியத் தேர்தல் முடிவுகளைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரும், அமெரிக்க தூதரும், இந்திய உயர் ஆணையருமான ஜலில் ஏ ஜிலானி கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் வார்த்தைத் தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரம், வர்த்தகம் போன்றவற்றில் மோசமான ஆண்டுகளாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், லண்டனில் வசிக்கும் தொழிலதிபருமான ரியாஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தொலைபேசியில் பேசுகையில், “பாகிஸ்தானில் இருக்கும் மக்களுக்கும், வெளிநாட்டில் வாழும் பாகிஸ்தானியர்களுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். நாங்கள் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறோம். பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைத் தடை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கும், எங்கள் தாய் மண்ணிலிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் அது பயன்படும்” என்று கூறியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

அமித் ஷா பேரம்... ஆடிப் போன ஸ்டாலின்

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் ரிசல்ட் கவலை; ஆறுதல் சொன்ன மோடி

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

.

எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?

.

பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!

.

.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வியாழன் 23 மே 2019