மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 18 செப் 2019

கம்ப்யூட்டர் விற்பனையில் பின்னடைவு!

கம்ப்யூட்டர் விற்பனையில் பின்னடைவு!

இந்தியாவில் பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையில் 8.3 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது,

ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் மொத்தம் 21.5 லட்சம் கணினிகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டு விற்பனையை விட 8.3 சதவிகிதம் சரிவாகும். தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகக் கணினி விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நுகர்வோரிடையே தேவை குறைவு மற்றும் இண்டெல் சிப் விநியோகத்தில் குறைபாடு போன்ற காரணங்களால் கணினி விற்பனை குறைந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் நுகர்வோர் சந்தையில் கணினி விற்பனை 26.5 சதவிகிதம் குறைந்துள்ளது. எனினும், வணிகப் பயன்பாட்டுக்கான கணினி விற்பனையைப் பொறுத்தவரையில், 7.3 சதவிகித உயர்வுடன் மொத்தம் 13.5 லட்சம் கணினிகள் விற்பனையாகியுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அரசுத் திட்டங்களைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வணிகப் பயன்பாட்டுக்கான கணினி விற்பனையில் சிறிது சரிவு ஏற்பட்டதாகவும் ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணினி விற்பனைச் சந்தையில் அதிகபட்சமாக, ஹெச்.பி. நிறுவனம் 28.1 சதவிகிதப் பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து டெல் (25.9%), லெனோவோ (25.2%) மற்றும் ஏசர் (11.7%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!

.

மோடிகளை உருவாக்கும் மோடி

.

.

வெள்ளி, 24 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon