மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

திரவம்: காற்றாகிப்போன எரிபொருள்!

திரவம்: காற்றாகிப்போன எரிபொருள்!

கேபிள் சங்கர்

ஆட்டோ சங்கரின் வெற்றிக்குப் பிறகு ஜீ 5 தன்னுடய ஆப்பில் வெளியிட்டிருக்கும் புதிய வெப் சீரிஸ். செம்ம டீம். அபிராமி மெகா மால் தயாரிப்பு. பிரபல ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் உருவாக்கம். திரைக்கதை எழுதினால் சொல்லி அடிப்பேன் என்று சொல்லும் யூகி சேதுவின் கதை. பிரசன்னா, அழகம் பெருமாள், சுயம், ஜான் விஜய், இந்துஜா என நட்சத்திரப் பட்டாளங்களின் அணிவகுப்பு. பெயர்களைக் கேட்கும்போதே ஆவலைத் தூண்டக்கூடிய டீம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து திரவத்தை உணர வைத்தார்களா?

ராமர் பிள்ளையின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதைதான் திரவம். ராமர் பிள்ளை என்பதற்குப் பதிலாய் ஆர்.பி. மூலிகை பெட்ரோல் என்பதற்குப் பதிலாக பச்சை பெட்ரோல். மூலிகை பெட்ரோல், ராமர் பிள்ளை என்பது அட்டகாசமான கதைக்களன்தான். அது திரையில் எப்படி வந்திருக்கிறது?

மிடில் ஏஜ் கேரக்டரில் பிரசன்னா. கோர்ட்டு கேஸில் ஆரம்பிக்கிறது கதை. யுவர் ஆனர், எனது கட்சிக்காரர் எனத் தூய தமிழில் ஆரம்பிக்கிறார் இந்துஜா. அவரை எதிர்த்து வாதாடுகிறார் அரசு வக்கீல். சாதாரண சீட்டிங் கேஸுக்கு பப்ளிக் பிராசிக்கியூட்டர் எதற்கு என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

தொடர்ந்து வரும் எட்டு எபிசோடுகளிலும் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

ஆர்.பி கண்டுபிடித்திருக்கும் பச்சை பெட்ரோல் சந்தைக்கு வந்தால் உலகப் பொருளாதாரமே கதிகலங்கிவிடும் என்பதற்காக ஒரு குழு அவரைக் கூலிக் கொலைகாரரை வைத்துக் கொல்ல முயல்கிறது. இன்னொரு பக்கம் அவர் மீது கேஸ் போட்டுக் கொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவரைக் கடத்தி அவரிடம் உள்ள ஃபார்முலாவைப் பறித்துவிட்டுக் கொல்ல வேண்டும் என்று அலைகிறார்கள்.

இத்தனை பேர் தேடும் ஆர்.பியோ மிகச் சாதாரண சயின்டிஸ்ட். ஆக்‌ஷன் ஏதும் செய்ய முடியாது. தொந்தி முந்திய உருவம். ஆறு வயதுப் பெண் குழந்தைக்குத் தகப்பன். பிள்ளைப் பூச்சி. இவரை நசுக்கவெல்லாம் பெரிய சுத்தியல் எதுவும் தேவையேயில்லை. ஆனால், எபிசோடுக்கு ஒருமுறை இவரைக் கொல்ல, கடத்த யாராவது முயன்றுவிட்டு, ‘சே.. எஸ்கேப்பாகிட்டான்’ என்று உள்ளங்கையைக் குத்திக்கொண்டு நிற்கிறார்கள்.

மெக்ஸிகன் வில்லன் எல்லாம் நல்ல தமிழில் வில்லன்களுடன் அளவளாவுகிறான். பட்டப்பகலில் கூடாரம் போட்டுச் சரக்கு பேக் செய்கிறான். போலீஸ் மொத்தமே மூன்று பேர்தான் இருக்கிறார்கள். அழகம் பெருமாள்கூட ரெண்டே ரெண்டு அடியாட்கள். காமெடி வேறு செய்கிறார்கள். பெய்ட் கில்லர் டெரராம். செம்ம காமெடியாய் பத்து சீனுக்கு ஒருமுறை காலி கிரவுண்டில் ஹை எண்ட் காரில் வந்து இறங்கி, வில்லன் கோஷ்டியுடன் அவனை காலி பண்ணிடறேன் என்று சொல்லிவிட்டுப் போகிறான். இறக்கிறான். ஜான் விஜய்க்கும் சுயமுக்கும் இருக்கும் உறவு, இந்துஜா, விஜய்க்குமான லிங்க் என ஓரிரு இடங்கள் மட்டுமே சுவாரஸ்யம்.

வில்லன்களிடமிருந்து தப்பிக்கிறேன் பேர்விழி என்று பிளாஸ்டிக் ஒயரில் தொங்கும் சைக்கிள் ஐடியா எல்லாம் கதை விவாதத்தின்போது நன்றாக இருந்திருக்கும். மேக்கிங்கில் படு திராபை.

மொத்தத்தில் மோசமான பி கிரேட் தெலுங்குப் படங்களுக்கு ஈடானது, மிக மோசமாக எழுதப்பட்ட இந்த திரவம்.

மிக சீரியசாய் நடித்துத் தன் வரையிலான நியாயத்தைச் செய்திருக்கிறார் பிரசன்னா. பேராசைக்கார எம்.எல்.ஏ.வாக அழகம் பெருமாள். நல்ல நடிப்புத்தான். ஆனால், கேரக்டர் வடிவமைப்பு இல்லாததால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

வெப் சீரிஸ் சினிமாவைவிடப் போட்டி நிறைந்த உலகமாய் உருவாகிக்கொண்டிருக்கிறது. கன்டென்ட்தான் இங்கே கிங். இதை உணராமல் பெரிய ஆட்கள் பெயர் மட்டுமே இருந்தால் போதுமென்று நினைத்து இம்மாதிரியான மொக்கை சீரிஸ்கள் வளர்ந்து வரும் ஜீ 5 போன்ற ப்ளாட்பார்ம்களுக்கு நல்லதல்ல.

மாய உலகில் நிகழும் நிஜக் கொலைகள்!

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!

.

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

.

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

.

தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!

.

.

.

செவ்வாய், 28 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon