மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

ரோஹித்தின் சிறந்த இன்னிங்ஸ்!

ரோஹித்தின் சிறந்த இன்னிங்ஸ்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய (ஜூன் 5) போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யுஜ்வேந்திர சஹல்.

பும்ராவும் சஹலும் தென் ஆப்பிரிக்க அணியை குறைந்த ரன்களில் சுருட்ட, ரோஹித்தின் நிலையான ஆட்டம், சிறப்பான சதம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

வெற்றி குறித்து விராட் கோலி பேசும் போது,“எங்களைப் பொறுத்தவரை வெற்றியுடன் இந்தத் தொடரைத் தொடங்கியிருப்பது முக்கியமானது. நாங்கள் ரன் ரேட்டில் அதிக வித்தியாசம் பெறாமல் இருக்கலாம். ஆனால், இந்த ஆட்டத்தில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காது என்பதைப் பார்க்க வேண்டும். இது கடும் சவாலாக இருந்தது” என்றார்.

தொடக்க வீரராகக் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் குறித்து அவர் கூறும் போது, “ரோஹித் ஷர்மா ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவரது சிறந்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் இது” என்றார்.

தனது ஆட்டம் குறித்து பேசிய ரோஹித், “இந்த போட்டி வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வழக்கமான ஆட்டத்தை ஆட முடியவில்லை. நேரம் எடுத்துக்கொண்டு மெதுவாகதான் விளையாடினேன்.

நான் விளையாட விரும்பும் சில ஷாட்களைத் தவிர்த்தேன். சரியான பந்துகளை மட்டுமே எதிர்கொண்டேன். குறைவான ஸ்கோர்தான் என்றாலும் ஆரம்பத்தில் மெதுவாகதான் விளையாடினேன். பின்னர் பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த முடிவெடுத்தேன். அணியில் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர். ஒன்றிரண்டு வீரர்களை மட்டுமே சார்ந்து ஓர் அணி செயல்பட முடியாது.

இந்தியாவைப் போல் அல்லாமல், இங்கிலாந்தில் கிளைமேட் சூப்பர். விளையாடும்போது அதிகமாக வியர்க்கவில்லை. மைதானமும் சிறப்பாக அமைந்தது” என்று கூறினார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon