மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

முதல்வர் மீது திமுக எம்.பி பொய் புகார்: செம்மலை

முதல்வர் மீது திமுக எம்.பி பொய் புகார்: செம்மலை

முதல்வர் மீது திமுக எம்.பி பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக அதிமுக எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று முன்தினம் ஈரடுக்கு பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்நிகழ்வில் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், “திறப்பு விழா குறித்து முறையான அழைப்பு ஏதும் வரவில்லை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மேட்டூரில் இன்று (ஜூன் 9) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ செம்மலை, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நலத்திட்ட உதவிகள் வழங்குவது, பாலம் திறப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றார். சேலத்தை வளர்ந்த நகரமாக மாற்ற பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறார். அவரை பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சியினர் சிலர், வேண்டுமென்றே குற்றம்சாட்டிவருகின்றனர்” என்றார்.

மேலும், “சேலம் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னும் பதவிகூட ஏற்காத எஸ்.ஆர்.பார்த்திபன், ‘விழாவுக்கு அழைப்பிதழே அடிக்கவில்லை என்ற பொய்யை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் எனக்கு கொடுத்த அழைப்பிதழ் இதோ என்று பத்திரிகையாளர்களிடமும் அவர் காட்டியுள்ளார்.

முதல்வர் மீது களங்கம் கற்பிப்பதற்காக இவ்வாறு கூறியிருக்கிறார். அரசு நிகழ்வை பொறுத்தவை விளம்பரம் கொடுப்பது ஒன்று. அழைப்பிதழ் அச்சடித்து எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவது மற்றொன்று. பாலத் திறப்பு விழாவுக்காக எந்தவிதமான அழைப்பிதழும் அடிக்கவில்லை. செய்தித் தொடர்புத் துறை மூலம் விளம்பரம்தான் கொடுக்கப்பட்டது. அந்த விளம்பரத்தைக் காட்டி இன்றைக்கு அவர் அப்படிப்பட்ட செய்தியை சொல்லியுள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்டது அழைப்பிதழா அல்லது விளம்பரமா என்பதை திமுக எம்.பி புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மோடி முதல் பயணமாக மாலத்தீவு சென்றது ஏன்?


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


ஞாயிறு, 9 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon