மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

கிச்சன் கீர்த்தனா: கருப்பட்டி குழிப்பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: கருப்பட்டி குழிப்பணியாரம்

புது மாப்பிள்ளை ஸ்பெஷல்!

கொங்கு மக்களிடையே பலவகைப் பணியாரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. கொங்கு நாட்டில் திருமணம் முடிந்து, மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும்போது பணியாரத்தைக் கூடையில் போட்டு அனுப்பும் வழக்கம், காலம்காலமாக இருந்துவருகிறது. புது மாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்து கொடுத்து அவரை இளவட்டக் கல்லைத் தூக்கச் சொல்லும் வழக்கமும் தமிழகத்தின் சில பகுதிகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது. இந்தக் கருப்பட்டிப் பணியாரத்தைச் சில பகுதி மக்கள் `படைப்புப் பணியாரம்’ என்கிறார்கள்.

என்ன தேவை?

பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப்

உளுத்தம் பருப்பு – கால் கப்

ஜவ்வரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

உடைத்த கருப்பட்டி – கால் கப்

ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சரிசி, ஜவ்வரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவிடவும். முதலில் உளுந்தை நன்கு பொங்க அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அரிசிக் கலவையை மாவாக அரைத்து உளுந்துடன் சேர்க்கவும். மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகக் கலந்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கருப்பட்டியைச் சேர்த்துக் கரைக்கவும். கருப்பட்டி பாகு ஆறிய பிறகு புளிக்க வைத்த மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய்விட்டு, மாவைக் குழிகளில் ஊற்றி, மூடிபோட்டு வேகவைக்கவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

என்ன பலன்?

கருப்பட்டி ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்குச் சுறுசுறுப்பைக் கொடுக்கும். நீரிழிவாளர்களும் இந்தக் கருப்பட்டி குழிப்பணியாரத்தைச் சுவைக்கலாம். இது சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதையும் குறைக்கும்.

நேற்றைய ரெசிப்பி: சிறுதானியக் குழிப்பணியாரம்


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon