மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

நேர்கொண்ட பார்வை: ரசிகர்களுக்கு அஜித்தின் அட்வைஸ்?

நேர்கொண்ட பார்வை: ரசிகர்களுக்கு அஜித்தின் அட்வைஸ்?

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜித். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா டைரங், ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், தப்ஸி உள்ளிட்டோர் நடித்து வெளியான பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே இப்படம். எனினும், பிங்க் படத்தில் இல்லாத சில மாற்றங்களை இப்படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் வினோத். உதாரணமாக, இப்படத்தில் அஜித் பங்குபெறும் சில சண்டைக்காட்சிகளை ட்ரெய்லரில் பார்க்கிறோம். ஆனால் பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் ஏதுமில்லை. அஜித்தும், ரங்கராஜ் பாண்டேவும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தும், யுவன் சங்கர் ராஜாவும் இப்படத்தில் இணைந்துள்ளதால் பின்னணி இசைக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே சற்று அதிகமாகவே இருந்தது. அவ்வகையில், பின்னணி இசையிலும் ரசிகர்களை யுவன் ஏமாற்றவில்லை. ட்ரெய்லரின் இறுதியில், “ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க?” என்ற வசனத்தை அஜித் பேசுகிறார். இது மறைமுகமாக ரசிகர்களுக்கு அஜித் சொல்லும் அட்வைஸ் என அஜித் ரசிகர்களே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon