மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

பிளாஸ்டிக் விற்றால் இன்று முதல் அபராதம்!

பிளாஸ்டிக் விற்றால் இன்று முதல் அபராதம்!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு அபராதம் விதிப்பதற்கான விதிமுறைகள் இன்று (ஜூன் 17) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது. பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களைக் கைப்பற்றி வந்தனர். இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர், சேமித்து வைப்போர், பயன்படுத்தும் சிறு வர்த்தகர்கள், பெரு வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகர்களைப் பொறுத்தவரையில் முதல் முறை பிடிபட்டால் ரூ.25,000 வசூலிக்கப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ.50,000, மூன்றாவது முறை பிடிபட்டால் ரூ.1 லட்சம் என்ற கணக்கில் அபராதம் வசூலிக்கப்படும். நான்காவது முறையாகப் பிடிபட்டால் வர்த்தகரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.

பொதுமக்களைப் பொறுத்தவரையில், அதிகாரிகளின் சோதனையின்போது பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களைச் சேமித்து வைத்திருந்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon