மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

கிச்சன் கீர்த்தனா: பருப்பு அடை!

கிச்சன் கீர்த்தனா: பருப்பு அடை!

பருப்பு அடை, நவதானிய அடை, ராகி அடை, கீரை அடை, தக்காளி அடை, கொள்ளு அடை, வாழைப்பூ அடை, வாழைத்தண்டு அடை, வெஜிடபிள் அடை, அவல் அடை, ட்ரை ஃப்ரூட் அடை, காராமணி அடை, பேபி கார்ன் அடை, மசாலா அடை, பாசிப்பருப்பு அடை, சுரைக்காய் அடை, கோங்குரா அடை, பெசரெட் அடை, தவலை அடை, வெள்ளரிக்காய் அடை… அட, ‘அடை’மழைதான். இப்படி அந்த அடை, இந்த அடை என்று ஏகப்பட்ட வகை அடைகள் இருந்தாலும் எப்போதும் பருப்பு அடைதான் பிரதானமானது.

என்ன தேவை?

பச்சரிசி - கால் கிலோ

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, கறுப்பு சுண்டல் கடலை, காராமணி, பச்சைப் பயறு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு - தலா 50 கிராம்

சுத்தம் செய்து ஆய்ந்த முருங்கைக்கீரை - 2 கப்

காய்ந்த மிளகாய் – 8

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியுடன், காய்ந்த மிளகாய், பருப்பு, பயறு வகைகளைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். இதை மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். மாவில் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைக் கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.

இந்த அடைக்குத் தொட்டுக்கொள்ளத் தக்காளி சட்னி அல்லது சின்ன வெங்காயச் சட்னி நன்றாக இருக்கும்.

என்ன பலன்?

இந்த அடையில் சேர்க்கப்படும் தானிய வகைகளில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துகள் அதிகம் இருக்கின்றன. இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவை. பயறு வகைகளை அதிகம் சேர்த்தால், சிலருக்கு வாயுத் தொல்லை வரலாம். ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் பயறு வகைகளைக் குறைவாகவும், முருங்கைக்கீரையை அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளலாம். எலும்புகள் உறுதி பெறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலுக்கு வலு சேர்ப்பதுடன், கபம், பித்தத்தையும் குறைக்கும்.

நேற்றைய ரெசிப்பி: கோதுமை இனிப்புப் பணியாரம்


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது