மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

‘உதிரா உதிரா’ மீண்டும் ஸ்ரேயா கோஷல்

‘உதிரா உதிரா’ மீண்டும் ஸ்ரேயா கோஷல்

பிரபுதேவா நடிக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின், லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

பொன் மாணிக்கவேல் திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் “உதிரா உதிரா வினவல் கோடி என்னில்” எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் ரொமான்டிக் மெலடியாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

டி.இமானின் இசையில், ஸ்ரேயா கோஷல் பாடிய பல பாடல்கள் பெரும் ரசிக பட்டாளத்தைப் பெற்று ஹிட்டானது. கும்கி திரைப்படத்தில் இடம்பெறும் ‘சொல்லிட்டாளே அவ காதல’, சாட்டை திரைப்படத்தில் உள்ள ‘சகாயனே’ பாடல், நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய ‘கண்டாங்கி கண்டாங்கி’, கயல் திரைப்படத்தின் வெற்றி பாடல்களான ‘எங்கிருந்து வந்தாயோ’, ‘என் ஆள பாக்க போறேன்’, மிருதன் திரைப்படத்தில் வரும் ‘மிருதா மிருதா’, அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெறும் ‘வானே..வானே’ போன்ற பல பாடல்கள் ரசிகர்களின் மனதை வென்று முணுமுணுக்க வைத்தன.

அந்த வரிசையில் பொன் மாணிக்கவேல் திரைப்படத்துக்காக, இமானின் இசையில் மதன் கார்க்கியின் வரிகளில் ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மரியா ரோ வின்சென்ட் இணைந்து பாடியுள்ள ‘உதிரா உதிரா’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபுதேவா முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’. இந்தத் திரைப்படத்தில் , அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் செல்லப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார். சூரி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon