மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் இயக்குநர்!

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் இயக்குநர்!

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஒரே சமயத்தில் பல படங்கள் தயாராகி வருகின்றன. அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றை அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார்.

எஸ்.பி.ஜனநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த் விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தை இயக்கிவருகிறார். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் இதன் மூலம் இயக்குநர் மகிழ் திருமேனி நடிகனாக அறிமுகமாகிறார்.

தடையற தாக்க, தடம் என த்ரில்லர் ஜானரில் தொடர்ந்து சில படங்களை இயக்கிய மகிழ் திருமேனி விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான மகிழ் திருமேனி இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்புக்குப் பின்னணி குரல் கொடுத்திருந்தார். தற்போது நடிகராகவும் களமிறங்குகிறார்.

சர்வதேசப் பிரச்சினை ஒன்றை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

இசக்கி துரை சொந்தமாகத் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுள்ளது. மற்ற நடிகர், நடிகைகளின் விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon