மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

என்டிடிவி நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

என்டிடிவி நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

பங்குப் பரிவர்த்தனை குறித்த விவரங்களைப் பங்குச் சந்தையில் சமர்ப்பிக்காத குற்றத்துக்காக என்டிடிவி நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூடெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமாகும். இந்நிறுவனத்தைத் தொடங்கிய பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகிய இருவரும் பங்குப் பரிவர்த்தனையில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, இவர்கள் இருவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்தது பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி. இந்த நிலையில் தற்போது, பங்குப் பரிவர்த்தனை விவரங்களை முறையாகச் சமர்ப்பிக்காத குற்றத்துக்காக என்டிடிவி நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் என்டிடிவி நிறுவனத்தின் 40 லட்சம் பங்குகளை இந்தியா புல்ஸ் ஃபினான்சியல் சர்வைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல, 2008 ஜூலையில் என்டிடிவியின் 20.28 சதவிகிதப் பங்குகளை அதன் புரோமோட்டர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பங்குப் பரிவர்த்தனை விவரங்களை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் என்டிடிவி நிறுவனம் சமர்ப்பிக்காமல் பங்குப் பரிவர்த்தனை விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தற்போது என்டிடிவி நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon