மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

மக்களவை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வாகும் ஓம் பிர்லா

மக்களவை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வாகும் ஓம் பிர்லா

மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓம் பிர்லாவை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் அவருக்கு ஆதரவளித்துள்ளதால் இன்று (ஜூன் 19) ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து ஓம் பிர்லா இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக மக்களவை சபாநாயகர் பதவியில் பெண்களே இருந்தனர். 2009ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மீரா குமார் மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் மக்களவை சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓம் பிர்லா ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பொறுப்பு வகித்துள்ளார். 2003ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றச் செயலாளராகவும் ஓம் பிர்லா பொறுப்பு வகித்துள்ளார்.

தற்போது ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமல்லாமல் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் ஆதரவளித்துள்ளன. மக்களவையில் பாஜகவுக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 352 எம்.பி.க்கள் உள்ளனர். பிஜு ஜனதா தளத்துக்கு 12 எம்.பி.க்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 22 எம்.பி.க்களும் உள்ளனர். மொத்தமாக ஓம் பிர்லாவுக்கு 386 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.

52 எம்.பி.க்களைக் கொண்ட காங்கிரஸும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளது. காங்கிரஸின் கூட்டணியில் இருக்கும் திமுகவும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், ஓம் பிர்லா இன்று ஒருமனதாக மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon