மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

தனுஷ் -மாரி செல்வராஜ்: கதாநாயகியை தேடும் படக்குழு!

தனுஷ் -மாரி செல்வராஜ்: கதாநாயகியை தேடும் படக்குழு!

பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து அடுத்தப் படத்திற்கான திரைக்கதையை நிறைவுசெய்துள்ளார் மாரி செல்வராஜ்.

கடந்த ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் குறித்து தனுஷ் நவம்பர் 14ஆம் தேதி, “இறுதியாக பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டேன். அட்டகாசமாக உள்ளது. அசலான வாழ்க்கை முறையை மிகவும் யதார்த்தமாக கண் முன் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்ததோடு தனது அடுத்தபடம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்.

“மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவரைப் போன்ற திறமையான இயக்குநருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்”என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதன்பின் தனுஷ், வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்திலும் தனுஷ் நடித்துவருகிறார்.

தற்போது தனுஷ், மாரி செல்வராஜ் சந்தித்து திரைக்கதையை இறுதிசெய்துள்ளனர். கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. விரைவில் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவுள்ளன.

பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதியக் கொடுமைகளை காத்திரமாக எதிர்த்துப் பேசிய படமாக உருவாகியிருந்தது. எனவே மாரி செல்வராஜின் இரண்டாவது படமும் அத்தகைய பாணியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தற்போது நடிக்கும் அசுரன் படத்தின் கதையும் இத்தகைய பாணியில் உருவாவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon