மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

பிளாஸ்டிக் தடை: ரூ.1.38 லட்சம் வசூல்!

பிளாஸ்டிக் தடை: ரூ.1.38 லட்சம் வசூல்!

சென்னையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான சோதனைகளில் சென்னை மாநகராட்சி ரூ.1.38 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது. பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களைக் கைப்பற்றி வருவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் ஜூன் 17ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 290 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு அபராதமாக ரூ.51,800 வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று (ஜூன் 18) நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 1,092.45 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதி அளவு பிளாஸ்டிக் பாரிஸ் கார்னர் பகுதியில் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் மொத்தம் 1,734 கடைகளில் சோதனைகள் நடந்துள்ளன. மொத்தம் ரூ.1.38 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் கார்னர் பகுதியில் 55 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டர்சன் தெரு மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள கடைகளில் மொத்தம் 505 கிலோ பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளில் எந்தக் கடைக்கும் அதிகாரிகள் சீல் வைக்கவில்லை. மூன்று முறைக்கு மேல் பிடிபட்டால் மட்டுமே உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைகள் மூடப்படும் என்ற விதிமுறை உள்ளது. தேனாம்பேட்டையில் 297.25 கிலோ பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் நடந்த சோதனைகளில் மொத்தம் ரூ.51,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon