மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

பினாமியால் பிரச்சினையில் சிக்கும் விஷால்

பினாமியால் பிரச்சினையில் சிக்கும் விஷால்

வேட்டைப் பொருளான நடிகர் சங்க பதவிகள் - 4

இராமானுஜம்

பாண்டவர் அணி கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, கட்டிடம் முடியும் தருவாயில் உள்ளது.

இருப்பினும் பாண்டவர் அணி இரண்டாக பிளக்கப்பட்டு போட்டி உருவாக காரணம் என்ன? பாண்டவர் அணியில் மீண்டும் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் விஷால் குறிவைத்து தாக்கப்படுவதற்கு காரணம் திரையுலக சங்க அமைப்புகள் எதிலும் எந்த பொறுப்புக்கும் அவர் தேர்ந்து எடுக்கப்பட கூடாது என ஆளும் அதிமுக அரசு விரும்புவதே என்கிறது அவரது வட்டாரம்.

அது மட்டுமின்றி நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்களில் பிரதான பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளம் நடிகர் விஷால். அந்த பொறுப்புகளுக்கு தகுந்தவாறு பொறுமை, நிதானம் இன்றி அவர் செயல்பட்டார் என்கின்றனர்.

ஒரே நேரத்தில் இரு சங்கங்களில் விஷால் பொறுப்பில் இருந்ததை பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான நட்பு வட்டம் தங்களை வளப்படுத்திக் கொள்ள முயற்சித்தனர்.

சினிமாவில் போதிய அனுபவம் இல்லாத கத்துக்குட்டி நடிகர்களான நந்தா, ரமணா இருவரும் ஆடிய ஆட்டம் ரொம்ப ஓவர் என்கின்றனர். இவர்களை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் விரும்பவில்லை இவர்களிருவரும் நடிக்க முயற்சிக்காமல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய மூன்று நிகழ்ச்சிகள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டனர்.

இவர்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால் நடிகர் பார்த்திபன் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவுக்கு முதல் நாள் சங்க துணைத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததுடன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவிலிருந்தும் விலகினார்.

நந்தா, ரமணா இருவரும் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் இல்லை என்ற போதும் இளையராஜா பாராட்டு விழாவுக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்கான பொறுப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் லாபமடைய விஷால் காரணமாக இருந்தார்.

அது மட்டுமின்றி விழா நடைபெறும் அரங்கில் கேன்டின் நடத்தும் காண்ட்ராக்ட் இவர்களுக்கே வழங்கப்பட்டு பொருட்கள் மும்மடங்கு விலைக்கு விற்பனை செய்ததை விஷால் ஒழுங்குபடுத்த முயற்சிக்கவில்லை.

நந்தா, ரமணர இருவர் செய்த தவறுகள் அனைத்தும் விஷாலுக்கு தெரிந்தே நடைபெறுகிறது அவரது பினாமிகள்தான் இவர்களிருவரும் என்பது இன்று வரை கூறப்பட்டு வருகிறது.

இன்று வரை இவற்றுக்கு உரிய பதிலை விஷால் கூறவும் இல்லை, அவர்களின் செயலை கண்டிக்கவும்இல்லை. நடிகர் சங்க அலுவலகத்திற்கு விஷாலை சந்திக்க வரும் மூத்த நடிகர்கள், நாடக நடிகர்கள் நந்தா, ரமணா இருவராலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்தனர். இதனை விஷால் கவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்களால் கொண்டு செல்ல முடியாத நிலையில், தொடர்பு எல்லைக்குள் அவர் கடந்த மூன்று வருட காலமாக இல்லை என்கின்றனர் பாண்டவர் அணி மீது அதிருப்தியில் உள்ளவர்கள்.

இவர்களுக்கு சற்றும் குறைவில்லாத அதிகார ஆட்டம் ஆடியவர்கள் விஷால் நம்பிக்கைக்குரியவர்களாக நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்து வரும் பாலமுருகன், மற்றும் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு பத்திரிகை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ஜான்சன்.

நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்த துணை நடிகர்கள் விஷாலை சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது அவர்களை அவமரியாதையாக பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நடிகர் சங்க உறுப்பினர்கள் 61 பேர் நீக்கப்பட்டனர் இவர்கள் தான் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இவற்றுக்கு காரணமான பாலமுருகன் சொல்கின்ற தகவல்களை நம்பி செயல்படுவதே விஷாலுக்கு எதிராக துணை நடிகர்கள் செயல்பட காரணம் என்கின்றனர்.

சங்கங்கள், தனிநபர்கள் இவர்களின் செயல்பாட்டை பொதுவெளியில் உரிய நேரத்தில் ஊடகங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு பிஆர்ஓ என அழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளரை சார்ந்தது.

இவர்கள் முறையாக செயல்பட்டால் சாதாரண நிகழ்வைக்கூட பிரம்மாண்டமாக்கி விடலாம்.சிறு தவறுகள் இவர்களது பொறுப்பின்மையால் பூதாகரமாக்கப்பட்டு சம்பந்தபட்டவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பத்திரிகை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ஜான்சன் அப்பொறுப்பை பயன்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொண்டாரே தவிர சம்பந்தபட்ட சங்ககளின் நன்மைக்காக விஷால் மேற்கொண்ட முயற்சிகளை ஊடகம் வாயிலாக பொது வெளியில் பொறுப்புடன் கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை என்கின்றனர் விஷால் நலம் விரும்பிகள்.

விஷால் பொறுமை, நிதானம் இல்லாதவர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்புடன் செயல்படவில்லை நடிகர் சங்க செயலாளராக அச்சங்கத்தின் வளர்ச்சிக்காக பொறுப்புடன் பணியாற்றியதால் தான் பிரம்மாண்டமாக நடிகர் சங்க கட்டிடம் முடியும் தருவாயில் உள்ளது.

அதற்கு இணையாக எதிர்ப்பு உணர்வு, வெறுப்பு என அனைத்தும் விஷாலுக்கு எதிராக பூதாகரமாக எழுவதற்கு அடிப்படை காரணகர்த்தாக்கள் நந்தா, ரமணா, பாலமுருகன், ஜான்சன் என்கிறது விஷால் நலம் விரும்பும் வட்டாரம். நால்வர் குழுவை எடுத்து தன்னை காப்பாற்றிக் கொள்ள போகிறாரா இல்லை பலிகடாவாக போகிறாரா விஷால் என்பதே கோடம்பாக்கத்தில் விவாதமாகி வருகிறது.

வேட்டைப் பொருளான நடிகர் சங்கப் பதவிகள் - 3


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon