மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

ஒரே தேர்தல் முறையில் பல்வேறு கேள்விகள்: ஜெயக்குமார்

ஒரே தேர்தல் முறையில் பல்வேறு கேள்விகள்: ஜெயக்குமார்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முன்வைத்து மக்களவைக்கும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டது. அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (ஜூன் 19) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்துள்ளது. பல மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் வர இன்னும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை உள்ளது. அதற்கு பிறகான காலத்தை எப்படி நிவர்த்தி செய்வது. இதுபோல பல்வேறு கேள்விகள் உள்ளன. அதற்கெல்லாம் விடைதேடிவிட்டு அமல்படுத்துவதுதான் நல்லது. இன்று நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் எங்களுடைய கருத்துக்களை தெரிவிப்போம்” என்றார்.

குடிநீர் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு, “100 சதவிகிதம் பெய்ய வேண்டிய மழையில் நமக்கு 40 சதவிகிதம்தான் பெய்துள்ளது. பாதிக்கு மேல் பருவமழை பெய்யவில்லை. ஆனால் அரசு தண்ணீர் பஞ்சத்தை தொடர்ந்து சமாளித்துவருகிறது. இதில் அரசியல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. மழை இல்லாத சூழலிலும் மக்களின் தேவைகளை 80 சதவிகிதம் வரை பூர்த்தி செய்துள்ளோம். புதிய வீராணம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவரவில்லை என்றால் தண்ணீர் பிரச்சினை இன்னும் மோசமாகியிருக்கும். நவம்பர் மாதம் வரை மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யக் கூடிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. என்றும் எதிர் வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும்” என்று விளக்கமளித்தார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon