மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

டிரைவிங் லைசன்ஸ்: கல்வித் தகுதி கட்டாயமல்ல!

டிரைவிங் லைசன்ஸ்: கல்வித் தகுதி கட்டாயமல்ல!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

நாட்டிலுள்ள பெரும்பாலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், குறிப்பாகக் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் முறையான கல்வித் தகுதி பெறவில்லை என்றாலும் எழுதப் படிக்கவும், திறன் பெற்றவர்களாகவும் உள்ளனர். அதேபோல, கல்வித் தகுதியற்ற பெரும்பாலான இளைஞர்கள் ஓட்டுநர் பணியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்குக் கல்வித் தகுதி ஒரு தடையாக உள்ளது. கல்வித் தகுதியில்லாதவர்களுக்கு ஓட்டுநர் தொழில் நல்ல வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது. எனவே ஓட்டுநர்களுக்கான கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஜூன் 18ஆம் தேதி போக்குவரத்து அமைச்சகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 8இன் படி, போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஓட்டுநர் உரிமத்திற்கான கல்வித் தகுதியை நீக்குவதன் மூலம் வேலைவாய்ப்பற்ற ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போக்குவரத்துத் துறையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 22 லட்சம் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இந்த முடிவு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சமீபத்தில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்தபோது, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சில ஓட்டுநர்கள் உரிமம் பெற கல்வித் தகுதி தடையாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றைய தினத்தில் இந்த முடிவை போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon