மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தடுப்பணைகள் கட்டப்படுமா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

தடுப்பணைகள் கட்டப்படுமா?  அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளது என பொதுப்பணித் துறையிடம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “உத்தமர் சீலி, வேங்கூர் பூசத்துறை கிராமங்கள் இடையேயான காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். கிளிக்கூடு இடையாற்றிமங்கலம், தண்ணீர் பந்தல் கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். இவ்விரு ஆறுகளிலும் அதிக மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஆற்றின் குறுக்கே செல்லும் பாலங்கள் வலுவிழந்துள்ளன” என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட இரண்டு இடங்களிலும் தடுப்பணைகள் கட்டினால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதால் தடுப்பணை கட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வில் நேற்று (ஜூன் 18) வந்தது. அப்போது, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, எத்தனை தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுப்பணித் துறையின் இணை தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon