மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

ஸ்பீல்பெர்க் தொடர்: பகலில் தெரியாது!

ஸ்பீல்பெர்க் தொடர்: பகலில் தெரியாது!

டிஜிட்டல் டைரி! 22 - சைபர் சிம்மன்

நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்டிரீமிங் மேடைகளுக்கு முன்னணி ஹாலிவுட் இயக்குநர்கள், நேரடியாகத் திரைப்படம் அல்லது இணையத் தொடர்களை இயக்கித் தருவதுதான் இப்போதைய டிரெண்ட். அதனால், ஹாலிவுட் ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஸ்டிரீமிங் சேவைக்குப் புதிய தொடரை உருவாக்கித் தர இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி வியப்பளிக்காமல் போகலாம்.

ஆனால், ஸ்பீல்பெர்க் உருவாக்க இருக்கும் இந்த திகில் தொடரில் வியக்க வைக்கும் ஒரு அம்சம் இருக்கிறது. இந்தப் புதுமையான இணையத் தொடரை இரவில் மட்டும்தான் பார்க்க முடியுமாம்.

கியூபி (Quibi) எனும் புதிய ஸ்டிரீமிங் சேவைக்காக தான் ஸ்பீல்பெர்க் புதிய தொடரை உருவாக்கித் தர முன்வந்திருக்கிறார். இந்தத் தொடருக்கான யோசனையைச் சொன்னபோதே, ரசிகர்கள் இதை இரவில் மட்டும்தான் பார்க்க முடிய வேண்டும் என நிபந்தனை விதித்தாராம்.

அதன்படியே, ஸ்டிரீமிங் சேவை நிறுவனமும் இரவில் மட்டுமே இந்த தொடரைப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள கடிகார வசதி மூலம் இரவு நேரத்தில் மட்டுமே இது ஸ்டீரீமிங் செய்யப்படும். காலை ஆனதும் தொடர் காணாமல் போய்விடும்.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற சேவைகளுக்குச் சவால் விடும் வகையில் அறிமுகம் ஆக இருக்கும் ஸ்டிரீமிங் சேவைக்கு ஏற்ற புதுமையான தொடர்தான் இல்லையா!

முதல் கம்ப்யூட்டர் மொழிக்கு நினைவுச் சின்னம்

பேசிக் புரோகிராமிங் மொழியை நினைவில் இருக்கிறதா? இன்று சி+, பைத்தான் போன்ற மேம்பட்ட புரோகிராமிங் மொழிகள் செல்வாக்கு பெற்றிருக்கும் நிலையில், பேசிக் (Basic), வழக்கொழிந்து போய்விட்ட பழைய புரோகிராமிங் மொழியாகக் கருதப்படலாம். ஆனால், கம்ப்யூட்டர் வரலாற்றில் பேசிக் மொழியின் முக்கியத்துவத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.

90’ஸ் கிட்ஸுக்கு இந்த மொழியின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் பயின்றவர்களில் பலர் இந்த புரோகிராமிங் மொழியில் இருந்து துவங்கியிருப்பார்கள். அதன் பிறகு, லோட்டஸ் போன்ற வேறு மொழிகளுக்குத் தாவினாலும், தொடக்கம் என்பது பேசிக்தான்.

1964ஆம் ஆண்டு இந்த கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழி அறிமுகமானது. பிகினர்ஸ் ஆல் பர்பஸ் சிம்பாலிக் இன்ஸ்டிரக்‌ஷன் கோடு (Beginner’s All-purpose Symbolic Instruction Code ) என்பதன் சுருக்கம்தான் Basic. பெயருக்கு ஏற்பவே இது அறிமுகம் நிலையில் உள்ளவர்களுக்கான எளிமையான புரோகிராமிங் மொழியாக இருந்தது.

அதன் பிறகு புரோகிராமிங் கற்க விரும்பியவர்களுக்கான முதல் மொழியாக பேசிக் அமைந்தது. பள்ளிக்கூடங்கள் துவங்கி, பயிற்சி நிறுவனங்கள் வரை பேசிக்கைக் கற்றுத்தந்தனர். இன்றைய கம்ப்யூட்டர் வித்தகர்கள் பலர் ஆரம்ப புரோகிராமிங்கை பேசிக்கில் எழுதியவர்கள்தான்.

இவ்வளவு ஏன், புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் தோன்றியதிலும் பேசிக் மொழிக்கு பங்கு இருக்கிறது.

இந்த பேசிக் நினைவலைகள் எதற்கு என்றால், பெரும்பாலானோர் மறந்துவிட்ட பேசிக் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பிறந்த ஊரில் பேசிக்கிற்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயரில் உள்ள, டார்ட்மவுத் கல்லூரியில் தான், 1964இல் பேசிக் மொழி அறிமுகமானது. ஜான் கெமினி, தாமஸ் இ.கர்ட்ஸ் ஆகிய இரு கணித மேதைகள் இந்த மொழியை உருவாக்கினர்.

டார்ட்மவுத் மற்றும் கம்ப்யூட்டர் உலகின் மைல்கல்லாக விளங்கும் பேசிக் மொழியைப் போற்றும் வகையில் நகரில் நினைவுப் பலகை ஒன்றை அமைக்க வேண்டும் என உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் பத்து மாதங்களுக்கு முன்னர் கட்டுரை எழுதியிருந்தார். அதன் பிறகு பலரைத் தொடர்புகொண்டு இந்தக் கருத்தை அவர் வலியுறுத்திவந்தார்.

இதன் பயனாக, தற்போது இந்த பகுதியில் பேசிக் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் நினைவுப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு நட்பான முதல் கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியான பேசிக், கல்லூரி மாணவர்கள் பலருக்கும் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை நெருக்கமானதாக மாற்றியதாக இந்த நினைவுப் பலகையிலுள்ள குறிப்பு தெரிவிக்கிறது.

டார்ட்மவுத் பேசிக்கின் பிறப்பிடம் மட்டும் அல்ல, இன்று பரபரப்பாகப் பேசப்பட்டும்வரும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கான முதல் விதை ஆழமாக விதைக்கப்பட்டது இங்குதான். அதே போல, இணையத்திற்கு டார்ட்மவுத்தில் அறிமுகமான மெயின்பிரேன் கம்ப்யூட்டர்கள் டைம் ஷேர் முறை, இணையத்திற்கான முன்னோட்ட வடிவமாகக் கருதப்படுகிறது.

பேசிக் மொழி பற்றிய பெருமைகளை இங்கே அறியலாம்.

ஃபேஸ்புக் முதலீட்டை ஈர்த்த மீஷுவின் வெற்றிக் கதை!


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon