மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

ஓம் பிர்லா பதவியேற்பு: சீனியர்களுக்கு ஏமாற்றம்!

ஓம் பிர்லா பதவியேற்பு: சீனியர்களுக்கு ஏமாற்றம்!வெற்றிநடை போடும் தமிழகம்

17ஆவது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். பின்னர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதி எம்.பியாக ஓம் பிர்லா பொறுப்பு வகிக்கிறார். மக்களவை சபாநாயகராக பதவியேற்ற ஓம் பிர்லாவுக்கு பாராட்டு தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, “கோட்டா தற்போது நாட்டில் கல்வி மையமாக இருக்கிறது. கோட்டாவின் வளர்சிக்காக ஓம் பிர்லா மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளார். பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக பல ஆண்டுகளை அவர் செலவழித்துள்ளார். புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஓம் பிர்லா வலிமையான உதவிக்கரமாக இருந்தார்” என்று தெரிவித்தார்.

ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “சபாநாயகர் நீரில் இருக்கும் தாமரையைப் போல இருக்க வேண்டும். அவர் பாஜகவிலிருந்து வந்தவராக இருக்கலாம். ஆனால், நீரில் ஒட்டாத தாமரையைப் போல இருக்க வேண்டும்” என்று கூறினார்.

ராமர் கோயில் இயக்கத்தின்போது சிறையிலடைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களில் ஓம் பிர்லாவும் ஒருவர். பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு ஓம் பிர்லா மிகவும் நெருக்கமானவர். ராஜஸ்தானில் பாஜகவுக்கு புத்துயிர் கொடுக்க அமித்ஷாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஓம் பிர்லா.

இதற்கு முன் எட்டு முறை எம்.பி பதவி வகித்து கடந்த 16ஆவது மக்களவை சபாநாயகராக பொறுப்பு வகித்த சுமித்ரா மகாஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று பல சீனியர் பாஜக எம்.பிக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஓம் பிர்லாவுக்கு அப்பதவி கிடைத்தது சீனியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக உள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon